வடக்கு – கிழக்கு எம்.பிக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு ஒருபோதும் கிடையாது-கஜேந்திரகுமார் எம்.பி.

516 Views

ஜனாதிபதிக்கு ஒருபோதும் கிடையாது

ஜனாதிபதிக்கு ஒருபோதும் கிடையாது: “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கு-கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு தரமாட்டார்கள்” என குறிப்பிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஜனாதிபதி கோட்டாபய, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற 69 லட்சம் வாக்குகளை காட்டிலும் வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ள உறுப் பினர்கள், தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்கள் என் றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- கடந்த தேர்தலில் ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்ஷ பெற்ற தென்னிலங்கை யின் வாக்குகளை பொறுத்தவரை, அது மொத்த வாக்குகளில் 60 சதவீதமாகும். எனினும் வடக்கு-கிழக்கில் தமிழ் மக் களின் சமஷ்டி தீர்வுடன் கூடிய தமிழ் தேசத்துக்காக தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகள் 75 சதவீதத்துக்கும் அதிகமான தாகும். அதிலும் வடக்கு-கிழக்கில் தெரிவாகி, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐந்து பேரில் மூன்று பேர் தமிழ்த் தேசத்தின் உரிமைகளுக் காகவே வாக்குகளை கேட் டனர்.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவின் ஒவ்வொரு தேர்தல் சுவரொட்டி யிலும் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கியி ருந்தன. எனவே பல்லாயிரக்கணக்கான மக்க ளின் உயிர்களை இழந்த நிலையில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் அளித்த ஆணையை கைவிட்டு, கோட்டாபயவின் இனவாத நிகழ்ச்சி நிர லுக்கு வடக்கு-கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு தரமாட் டார்கள். இந்தநிலையில் ஜனாதிபதியும், தமிழ் மக்களின் ஆணையை கைவிட்டு அரசாங் கத்தின் இனவாத கொள்கைக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது” என்றார்.

Leave a Reply