‘எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவு ஈரானின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கூறியுள்ளார்.
தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இந்த செய்தியைப் பதிவிட்ட அவர், தற்போதைக்கு “மனிதநேயம் மற்றும் தார்மீகக் காரணங்களுக்காக, இந்தத் தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்க வேண்டாம் என்று தான் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் சேமிப்பு டேங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



