மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களால் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

596 Views

தமிழர்களால் பிரபாகரனின் பிறந்தநாள்மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களால் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.  மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்கள் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பிரபாகரனின் 67ஆவது பிறந்த நாளை மண்டபம் முகாமில் இரவு கேக் வெட்டி கொண்டாடினர்.

13 0 மண்டபம் முகாமில் இலங்கை தமிழர்களால் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்மண்டபம் இலங்கை தமிழர் முகாம் வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் என்ற புகைப்படம் அச்சிட்ட மெகா சைஸ் கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கி கொண்டாடினர். அப்போது பிரபாகரன் வாழ்க, அவரின் புகழ் வளர்க என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

Leave a Reply