Port City சட்ட மூலம் அமுலுக்கு வந்தால் இலங்கைக்கு ஆபத்து – ரணில் எச்சரிக்கை

Port City சட்ட மூலம்  தற்போதுள்ள விதத்தில் சட்டமாக்கப்பட்டால், நிதியியல் செயற்பாட்டு  செயலணி (FATF) இலங்கையை மீண்டும் கறுப்பு பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகலாம் ன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

Port City பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தங்களை செய்வதன் ஊடாக தடை செய்யப்பட்ட பட்டியலில் வருவதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடந்த 2011ம் ஆண்டு நிதியியல் செயற்பாட்டு செயலணியின் கறுப்புப் பட்டியலில் இருந்ததாகவும், தாம் 2015ம் ஆண்டு மேற்கொண்ட திருத்தங்களால் சாம்பல் நிற பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு பணச் சலவை பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள Port City மூலம் வெளிநாட்டு நிதி நிறுவணங்களும் வங்கிகளும் கட்டுப்பாடுகள் இன்று பணத்தை வைப்பிலிட அனுமதிப்பதாகவும், அது கறுப்பு பணத்தை பணச் சலவை செய்வதை நோக்கி இட்டுச் செல்லும் என்று முன்னாள் பிரதர் தெரிவித்துள்ளார்.