அரசியல் தரகர்களும்,ஆயுதப் போராட்டமும்

”70 ஆண்டு அரசியல் பின்னடைவுகளை பற்றியோ அல்லது 2009க்கு பின்னர் 10 ஆண்டுகள் ராஜதந்திர ஏமாற்றத்தை பற்றியோ அதிகம் பேசாமல்இ ஆயுதப் போராட்ட பின்னடைவுஇ அதன் மீது தாம் காட்டும் வெறுப்பு போன்றவற்றுக்கு தேர்தல் பரப்புரையின் போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்”.

சுமந்திரனை ஆயுதம் ஏந்தச் சொல்லி யாரும் கோரவில்லை.அதேவேளை ஆயுதம் ஏந்தப் போகிறோம் என்று எந்த ஒரு கட்சியும் கூறவில்லை. இந்த நேரத்தில் தேர்தல் பரப்புரையின் போது பேச எவ்வளவோ விடயங்கள் உள்ளன.

மக்களுக்கு உண்மையானவர்களாக இருந்தால் 2009க்கு பின்னரான அரசியல் பின்னடைவுகளை முடிந்தால் மக்களுக்கு விளக்கலாம். ஆயுதப் போராட்டம் பற்றி சும்மா பிதற்ற தேவையில்லை.

விடுதலைப் புலிகளால் மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்ட பலம் ஒரு காலத்தில் ஈழத்தமிழருக்கு அவசியமாக இருந்தது. இல்லாது போனால் தொடர்பு சாதனங்கள் அற்ற காலத்தில் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நடந்த சிங்கள இனவெறி படுகொலைகளை தடுத்திருக்க முடியாது.

ஆயுதப் போராட்டமூலம் பெற்ற பலம் தான் இன்று தமிழர் இனப்பிரச்சனையை அனைத்துலக மட்டத்தில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. அந்த உண்மையை மக்கள் மனதிலிருந்து அகற்றி ஒரு கொழும்புவாசி எந்த மனநிலையில் வாழ்கிறானோ அதேபோல் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்களையும் மாற்ற எண்ணுகிறார்கள்.

பல மதங்களை பின்பற்றும் இலங்கைத் தேசத்தில் இருவேறு இனங்கள்இ இருவேறு மொழிகள்இ வேறுபட்ட பண்பாடுகள்இ பழக்கவளக்கங்ளை கொண்ட நிலப்பிரதேசங்களில் மக்கள் வாழ்கிறார்கள் என்ற அடிப்படையை குலைத்து ஒரு (சிங்கள) இனத்தின் கீழ்இ ஒரு மொழியைப் பேசும் மக்களாக மாற்றவே தமிழ் அரசியல் தரகர்கள் முயன்று வருகிறார்கள்.

அதனை செயற்படுத்த தமிழர் நிலங்களில் வாழும் இளையோர்கள் குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.70 ஆண்டு அரசியல் பின்னடைவுகளை பற்றியோ அல்லது 2009க்கு பின்னர் 10 ஆண்டுகள் ராஜதந்திர ஏமாற்றத்தை பற்றியோ அதிகம் பேசாமல்இ ஆயுதப் போராட்ட பின்னடைவுஇ அதன் மீது தாம் காட்டும் வெறுப்பு போன்றவற்றுக்கு தேர்தல் பரப்புரையின் போது முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்கள் இடமளிக்க வேண்டாம். சுமந்திரனின் பேச்சுத் திறமைக்கு மயங்காமல் அவர்களின் அரசியல் பின்னடைவுகளைப் பற்றி கேள்விகளை முன்வைக்கவேண்டும்.