இலங்கை: சில மாதங்களில் அதிகளவான பெண்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தகவல்

192 Views

பெண்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தகவல்

கடந்த சில மாதங்களில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1500 பெண்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் பயணப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசாரணை களில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவதுடன், சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply