415 Views
நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு காவல்துறையினருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது