சுவீகரித்த வயல் காணிகளை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க திட்டம்

321 Views

சுவீகரித்த வயல் காணிகள் விரைவில் விவசாயிகளுக்கு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்புத் திணைக்களத்துக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வயல் காணிகளை பயிர்ச் செய்கைகளுக்காக விரைவாக விவசாயிகளுக்கு விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான பணிப்புரைகளை கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடுத்த மாதம் முதல் யூரியா உரம் பத்தாயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது   அமைச்சர் மஹிந்த அமரவீர  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply