20 ஆவது திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் படம் குப்பைத் தொட்டியில்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

20 ம் திருத்தச் சட்டத்திற்கு  ஆதரவு வழங்கிய முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில்  நடைபெறும் போராட்டத்தில் அவர்களின் படம் பொறித்த குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின்  பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில்  பல பகுதிகளிலும் போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் குறித்த எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை சேர்ந்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.