‘மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம்’ – குவைத்தில் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்

குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், மக்கள் தூதரகத்துக்கு வர வேண்டாம் என்றும், தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏ.எஃப்.பி மற்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி முகமைகளின் படி, குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அல்லது அதற்கு அருகே புகை எழுவதைக் காணக்கூடிய நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“தூதரகத்துக்கு வராதீர்கள். உங்கள் வீட்டின் கீழ் தளத்தில், ஜன்னல்களிலிருந்து விலகி இருங்கள், வெளியே செல்ல வேண்டாம்” என்று தூதரகத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, அமெரிக்க குடிமக்கள் சாத்தியமான தாக்குதல்களுக்கு தயாராக இருக்கவும், விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்க தூதரக ஊழியர்கள் ‘அந்தந்த இடங்களில் பாதுகாப்பாக’ உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.