எரிபொருளுக்காக பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள்

பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள்

பருத்தித்துறையில் அலைமோதும் மக்கள்

எரிபொருளுக்காக பெருமளவான மக்கள் பருத்தித்துறை – புலோலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அலைமோதிக் கொண்டுள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் சீராகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

இருந்த போதிலும் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த நாட்களில் எரிபொருள் விநியோகம் வழங்கப் பட்டிருக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை காணப்பட்டது.

இந்நிலையில் இன்று (21) நண்பகல் முதல் பருத்தித்துறை – புலோலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.

வடமராட்சி பகுதியில் உள்ள மற்றைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் புலோலி எரிபொருள் நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் காத்திருந்தனர்.