டெல்லியில் காற்றின் தரம் குறைந்ததால் மக்கள் பாதிப்பு

இந்திய தலை நகர் டெல்லியில் காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையில் உள்ளது. பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 500-ஐ எட்டியுள்ளது.

டெல்லியில் காற்றுத் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. திங்கட்கிழமை காலை, நகரம் முழுவதும் அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்பட்டிருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB)படி, பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு (AQI) சுமார் 500 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

401 முதல் 500 வரையிலான காற்றுத் தரக் குறியீடு ‘கடுமையான’ வகைப்பாட்டில் கருதப்படுகிறது.

திங்கட்கிழமை காலை 9 மணிக்கு டெல்லியின் ரோஹினி பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 500ஆகப் பதிவானது. அதே சமயம் வஜிர்பூர் பகுதியில் அது 499 ஆக இருந்தது.

ஆனந்த் விஹாரில் காற்றுத் தரக் குறியீடு 493 ஆகப் பதிவானது.