நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 68 உடல்கள் மீட்பு

நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே 72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில்,விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளில் 53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் இருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.