தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில் தமிழரசு பங்கேற்கும்; புதிய திருத்தங்களை முன்வைப்பர்

454 Views

தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்
தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்: தமிழ் பேசும் கட்சிகள் இன்றுகூடி பொது உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளன. பொது உடன்படிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக தனியான வரைவு ஒன்றுடன் தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் பங்கேற்பது என்று அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன், இந்த வரைவில் கூறப்பட்ட விடயங்கள் பொது உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்ளப்பட்டால் மட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சி அதில் கையொப்பமிடும் என்றும் நேற்று கொழும்பில் கூடிய தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்று கட்சியின் மூத்த தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது. காலை 11 மணிக்கும் மாலை 6 மணிக்கு மாக இரு அமர்வுகளாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா தலைமை தாங்கினார்.

ரெலோ கட்சியின் அழைப்பின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு – வெள்ளவத்தை – மரைன் டிரைவ் குளோபல் ரவர்ஸ் ஹோட்டலில் தமிழ் பேசும் கட்சிகள் கூடிப் பேசுகின்றன. இதன்போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் விதமான கடிதம் ஒன்றை கூட்டாக கைச் சாத்திட்டு அனுப்பவுள்ளன.

இந்தப் பொது உடன்பாட்டுக் கடிதத்தில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்தே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயல்குழு நேற்றுக் கூடிப் பேசியது. இதன்போது, “13ஆவது திருத்தச் சட் டத்தை தாண்டி உச்சபட்ச அதிகாரப் பகிர்வு வலியுறுத்தப்பட வேண்டும்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்ற – மக்களின் ஆணை கிடைக்கப்பெற்ற விடயங்களை வலியுறுத்துவனவாக இருக்கும். அதேசமயம், இந்தியப் பிரத மர் மோடி இலங்கை வந்த போது வலியு றுத்திய கூட்டு உறவு சமஷ்டிக் கட்ட மைப்பு விட யத்தை கோருவது என்றும், 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தும் அதேநேரம் 16ஆவது திருத்தச் சட்டத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் குறிப்பிடுவது என்றும் தமிழ் அரசு கட்சி யின் வரைபில் விடயங்கள் உள்ளடங்கு கின்றன. மேலும், இன்றைய கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந் தன், கட்சித் தலைவர் மாவை சோ. சேனாதிரராசா, பாராளுமன்ற உறுப்பி னர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் பங் கேற்பார்கள்.

தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தும் விடயங்களும் பொது உடன்பாடு எட்டப்படும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டால் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசாவும் கையொப்பமிடுவர் என்றும் முடிவு எட்டப்பட்டது. தமிழ் அரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் செயல்குழு கூட்டத்தில் இரா. சம்பந்தன், மாவை சோ. சேனாதிராசா, எம். ஏ. சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்திய லிங்கம், சீ. வீ. கே.சிவஞானம், கே.வி.தவராசா, கி.துரைராஜசிங்கம், த.கலைய ரசன், சே. குலநாயகம் ஆகியோர் பங் கேற்றனர்.

Tamil News

Leave a Reply