சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டம் தொடர்பாக அரசாங்கம் செய்துள்ள உடன்படிக்கையின் மீது பாராளுமன்றம் இன்று வாக்களிக்கவுள்ளது.
குறித்த மூன்று நாள் விவாதம் முடிவடைந்ததை அடுத்து இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிக்கையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் புதன்கிழமை ஆரம்பமானது.
சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் பிரதான கொள்கை நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.
IMF உடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தம் தொடர்பான பிற ஆவணங்கள் மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.