இலங்கை இளைஞனை காதலித்த பாகிஸ்தான் பெண்ணை அவுஸ்திரேலியாவில் “ஆணவக் கொலை” செய்ய முயற்சி?

இலங்கை இளைஞனை காதலித்த

அவுஸ்திரேலியாவில் அடிலெய்ட்டில் இலங்கை இளைஞனை காதலித்த பாகிஸ்தான் பெண்ணை குடும்பமே சேர்ந்து ‘ஆணவக்கொலை’ செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்ற சம்பவத்தில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம்வரை ஒத்திவைத்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியா – அடிலெய்ட்டின் Blair Athol பிரதேசத்தில் வசித்துவந்த – பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட – 21 வயது முஸ்லிம் யுவதி ஒருவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட – கிறிஸ்தவ இளைஞரும் காதலித்து வந்ததாகக்  கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாகக் கல்விகற்ற பல்கலைக்கழகத்தில் இந்தக் காதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் அடிலெய்ட்டில் இலங்கை இளைஞனைக் காதலித்த பாகிஸ்தான் பெண்ணை குடும்பமே சேர்ந்து ‘ஆணவக்கொலை’ செய்வதற்கு முயற்சித்தார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.