பாகிஸ்தான்- வெளியில் செல்லும் போது மகள் தலையில் சிசிடிவி கேமரா: தந்தையின் செயலால் பரபரப்பு

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் பல வகையான  காணொளி வெளியாகின்றன. அதில் தற்போது ஒரு காணொளி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதாவது  பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தலையில் சிசிடிவி கேமராவுடன் தெருவில் செல்கிறார். இது வித்தியாசமாக இருந்ததால் அந்தப்பெண்ணை ஒருவர் பேட்டி எடுக்கிறார்?தலையில் சிசிடிவி கேமரா ஏன்? எனகேட்டதற்கு அந்தப் பெண் கூறுகையில், ‘‘நான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக என் தந்தை இதை பொருத்தியுள்ளார். இது எனக்கு பாதுகாப்பாக உள்ளது. எனது தந்தைதான் எனது பாதுகாவலர். கராச்சியில் தாக்குதல், கொலை, பாலியல் வன்கொடுமை என பல சம்பவங்கள் நடைபெறுவது கவலை யளிப்பதாக உள்ளது. ஆகையால் எனது பாதுகாப்புக்காக இந்த கேமராவை என் தந்தை பொருத்தியுள்ளார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை’’  என்றார்.

தந்தையின் இந்த செயலை நியாயப்படுத்தும் படுத்தும்படியாக குறித்த பெண் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.