திருகோணமலை:கிண்ணியாவில் நெல் அறுவடை ஆரம்பம்,விளைச்சல் இம்முறை குறைவு

71 Views

கிண்ணியாவில் நெல் அறுவடை

கிண்ணியாவில் நெல் அறுவடை: திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ளது.

வெல்லாங் குளம், குரங்குபாஞ்சான், கிரான், வாழை மடு போன்ற  விவசாயிகள் நெல் அறுவடையினை இயந்திரம் மூலமாக அறுவடையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இம் முறை அறுவடை குறைவாக உள்ளதாகவும் தங்களுக்கு போதுமான பசளை கிடைக்காமையிலனால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இம் முறை இப் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட  ஏக்கர் அளவில் நெல் விவசாயம் செய்யப்பட்ட போதிலும் அறுவடை குறைவாக உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

சேதனப் பசளை வெற்றியளிக்கவில்லை இதனால் தாங்கள் கடன் பட்டும் மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும் இம் முறை நெற்செய்கை செய்த போதிலும் விளைச்சலின்றி பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே தங்களுக்கான அசேதனப் பசளை மற்றும் இழப்பீட்டையும்    தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply