நிலவை நோக்கி செல்லும் ‘ஓரியன்’ விண்கலம்

ஆர்டெமிஸ் 2 திட்டம், ஓரியன் விண்கலத்தை நிலவுக்கான அதன் பயணத்தில் உந்திச் செலுத்தவிருக்கும் ஒரு முக்கியமான எஞ்சின் எரிப்பை நிறைவு செய்துள்ளது.

நிலவை நோக்கிய இந்த உட்செலுத்து எரிப்பு, (translunar injection burn) இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 5:19-க்கு தொடங்கி, சுமார் ஆறு நிமிடங்கள் நீடித்தது. “மனிதகுலம் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது,” என்று கனடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன், இதற்கு பிறகு தனது முதல் செய்தியில் கூறினார்.

“நிலவைச் சுற்றியுள்ள இந்தப் பயணத்தில், எதிர்காலம் குறித்த உங்கள் நம்பிக்கைகளே இப்போது எங்களை முன்னோக்கிச் செலுத்துகின்றன,” என்று அவர் கூறினார். “நிலவை நோக்கிச் செல்லும் இவ்விடத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உணர்கிறோம்,” என்று ஹேன்சன் நாசாவின் நேரலையில் கூறினார்.

இந்த முழு செயல்முறையும் “எந்தத் தடங்கலும் இன்றி” நடந்ததாகவும், அனைத்து விண்வெளி வீரர்களும் “மிகவும் நலமாக” இருப்பதாகவும் நாசா தெரிவித்தது.

பிபிசியின் அறிவியல் செய்தியாளரின் கூற்றுப்படி, விண்கலம் புவியின் சுற்றுப்பாதையின் மிகக் குறைந்த புள்ளியில் இந்த எரிப்பைத் தொடங்கியது. இந்த பயணத்தின் போது யாரும் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். ஓரியன் விண்கலம் சந்திரனை வெறுமனே சுற்றி வரும்.

நன்றி- பிபிசி