13ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு -பௌத்த மதகுருமாருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு

186 Views

13ஆவது திருத்தத்திற்கு எதிராக கொழும்பில் தற்போது  பௌத்த மத குருமார் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வரும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பௌத்த மத குருமார் பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது அப்பகுதியில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் அவர்களை தடுக்க முற்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பௌத்த மத குருமாருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினரும் பௌத்த மத குருமாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து பௌத்த மத குருமாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “பௌத்த மத குருமார் மீது கை வைக்க வேண்டாம், அவர்களுக்கான மரியாதையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply