இன்று முதல் சபை அமர்வுக்கு செல்லும் எதிரணி எம்.பிக்கள்

330 Views

சபை அமர்வுக்கு செல்லும் எதிரணி எம்.பிக்கள்ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளனர். இதனால் மீண்டும் சபை அமர்வுக்கு செல்லும் எதிரணி எம்.பிக்கள் அமர்வுகளில் கலந்து கொள்வர்.

நேற்று பிற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மனுஷ நாணயக்கார எம்.பி மீதான ஆளுங்கட்சி எம்.பிக்களின் தாக்குதல் முயற்சியையடுத்து, பாராளுமன்ற வளாகத்தில் எம்.பிக்களுக்கு பாதுகாப்பில்லையென தெரிவித்து வரவு-செலவுத் திட்ட விவாதத்தை ஐக்கிய மக்கள் சக்தி பகிஷ்கரித்திருந்தது.

Leave a Reply