ஆகஸ்ட் மாதத்தில் கட்டாய இராணுவ சேவை நெருக் கடியைச் சமாளிக்கும் முயற்சியாக, உக்ரைன் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதிலிருந்து கிட்டத்தட்ட 100,000 இளைஞர்கள் உக்ரைனை விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிட்டிகோ மற்றும் தி டெலி கிராஃப் ஊடகங்கள் கடந்த புதன் கிழமை(29) தெரிவித்துள்ளன.
போலந்து எல்லைக்காவல் படையின் தரவை மேற்கோள் காட்டி, செப்டம்பர் மற்றும் அக் டோபரில் 18 முதல் 22 வயதுக் குட்பட்ட 98,500 உக்ரேனியர்கள் எல்லையைத் தாண்டியதாகவும், ஜனவரி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வெறும் 45,300 பேர் மட்டுமே எல்லையைத் தாண்டியதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.
துருப்புக்கள் தொடர்ந்து பெரும் இழப்பு களைச் சந்தித்து ரஷ்யப் படைகளிடம் நிலத்தை இழந்து வருவதால், இராணுவ வெற்றிடத்தை நிரப்ப அதிகாரிகள் போராடி வருகின்றனர். துருப்புக்களின் பற்றாக்குறை ரஷ்ய வீரர்கள் தமது நிலைகளுக்குள் “ஊடுருவ” வசதியாக உள்ளது என முன் வரிசையில் உள்ள உக்ரேனிய தளபதிகள், தெரிவித்துள்ளனர்.
கியேவின் கட்டாய படைதிரட்டல்கள் பொதுமக்களின் சீற்றத்தையும் எதிர்ப்புகளையும் தூண்டியுள்ளது, அதிகாரிகள் தெருக்களில் பதுங்கி யிருந்து இராணுவ வயதுடைய ஆண்களை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றிச் செல்வதைக் காட்டும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. உக்ரைனின் எல்லைக் காவல்படையின் கூற்றுப்படி, 2022 முதல் திஸ்ஸா நதியைக் கடக்க முயன்றபோது சுமார் 50 ஆண்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.



