முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு வளாகத்தில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 7 மணியளவில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டன. கொடூர தாக்குதலில் 62 பேர் கொல்லப்பட்டனர். இதில் அநேகர் உயர்வகுப்பு மாணவியர்.
இந்த தாக்குதலில் உயிர் பறிக்கப்பட்டவர்களின் நினைவுநாள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் மிகுந்த வலியுடன் நினைவுகூரப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட வள்ளிபுனத்தில் மக்கள் தமது நினைவுகூரலை வருடம் தோறும் நடத்திவரும் நிலையில் இம்முறை சிறிலங்கா அரசாங்கம் அந்த நிகழ்விற்கு தடைவிதித்திருந்தது.
இந்தநிலையில் யாழ் பல்கலைக்கழகத்தில், செஞ்சோலையில் உயிரிழந்த சொந்தங்களுக்காக உணர்பூர்வமான நினைவு வணக்கம் இடம்பெற்றுள்ளது