ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது – இந்திய சுகாதார அமைச்சகத்தின் அமைப்பு

ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது

இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவல் நிலையை எட்டியது. பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள INSACOG அமைப்பின் வாராந்திர அறிக்கையில், ஓமிக்ரான் இப்போது இந்தியாவில் சமூக பரவல் நிலையில் உள்ளது மற்றும் பல பெருநகரங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் – சென்னையில் கொரோனா தொற்றுப்பரவல் குறைந்து வருவதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சென்னையில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 100 பேரில் ஒருவர் என்ற அளவில் இருந்த இறப்புவிகிதமும் தற்போது ஆயிரம்பேரில் ஒருவர் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேபோல் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையும் 500 மெட்ரிக் டன் என்ற அளவில்இருந்து 117 ஆக குறைந்துள்ளது” என்றார்.

Leave a Reply