ஆப்கான் அகதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 3,000 விசாக்களில் ஒன்று கூட வழங்கப்படாத நிலை

ஆப்கான் அகதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட

ஆப்கான் அகதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 3,000 விசாக்கள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு உறுதியளித்திருந்த நிலையில், அதில் ஒரு விசா கூட பரிசீலிக்கப்படவில்லை என ஜலியன் ஹில் எனும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய மனிதாபிமான திட்டத்தின் கீழ் அடுத்த 4 ஆண்டுகளில் ஆப்கான் நாட்டவர்களுக்கு10,000 இடங்கள் ஒதுக்கப்படும் எனும் அறிவிப்பை ஜூலியன் ஹில் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுகையில் குறைவான உறவு பேணப்பட்ட சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு முந்தைய காலங்களில் மனிதாபிமான திட்டத்தில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஹில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த வகையில், ஆப்கானியர்களுக்கான தற்போதைய அறிவிப்பு அவுஸ்திரேலியவுக்காகவும் அவுஸ்திரேலிய படையினருக்காகவும் தங்களது உயிர்களை பணயம் வைத்தவர்களை, ஆப்கான்-அவுஸ்திரேலியர்களை அவமதிப்பதாகும் என ஹில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Tamil News