போதியளவு டீசல் வழங்கப்படுவதில்லை : வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் கவலை

டீசல் வழங்கப்படுவதில்லைதிருகோணமலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்வதற்கன போதியளவு டீசல் வழங்கப்படுவதில்லை என மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

திருகோணமலை எரிபொருள் நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தும் தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடி தொழிலினை முன்னெடுத்து செல்ல முடியாமல் உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இன்று (19) காலை டீசல் பெறுவதற்றாக நீண்ட வரிசையில் காத்திருந்து  டீசல் வழங்கமுடியாது என எரிபொருள் நிலைய ஊழியர்களினால்  தெரிவிக்கப் பட்டதையடுத்து  அங்கு  அமைதியின்மை ஏற்ப்பட்டது.

பின்னர் ஒருவருக்கு 2000 ரூபாய்க்கு  டீசல் வழங்கப்பட்டதாகவும் அவ்வாறு பெறப்பட்ட டீசல் மூலம் கடலில் எவ்வளவு தூரம் சென்று தமது தொழிலை செய்ய முடியும் என மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமது படகுகளின் அனுமதிப்பத்திரத்தினை காண்பித்தும் தமக்கு போதுமான டீசல் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

மேலும் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் தாங்கள் நிவாரணம் கேட்கவில்லை எனவும் தமது தொழிலை முன்னெடுத்து செல்ல எரிபொருளினை வழங்க அல்லது படகின் அனுமதி பத்திரத்திட்க்கு அமைவாக மீன்பிடி துறைமுகங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலாவது டீசல் பெற்றுத்தர அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil News