வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்திய பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன-அண்ணாமலை

இலங்கையை பொறுத்தவரையில் வடக்கும், கிழக்கும் முழுவதுமாக இந்திய பிரதமர் மோடியின் கைகளிலேயே உள்ளன. மோடியையே அந்த மாகாண மக்கள் நம்பியிருக்கின்றார்கள் என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழகம் சென்ற அவர் அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

“அபிவிருத்தித் திட்டங்களை  இந்தியா செய்கின்றது.13 ஆவது திருத்தமே தீர்வு என்பதில் இந்தியா  உறுதியாக இருக்கின்றது. அதற்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன“ என மேலும் தெரிவித்துள்ளார்.