‘திருகோணமலையில் எரிபொருள் இல்லை’ – மக்கள் பாதிப்பு

திருகோணமலையில் எரிபொருள் இல்லை

திருகோணமலையில் எரிபொருள் இல்லை

திருகோணமலை நகரில் இன்று (14) நண்பகல் முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாமையினால் அந் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டுள்ளன.

இதனால் எரிபொருள் நிரப்ப வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.   எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எரி பொருள் நிரப்பு நிலையங்களில் எரி பொருள் விநியோகம் இடம் பெற்றாலும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் இருந்தே பெற வேண்டியதொரு நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply