சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று (9) பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோகனதீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம கொறடா அஜித் பி. பெரேரா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலீப் வெதாரச்சி, சமிந்த விஜேசிறி மற்றும் வருண லியனகே ஆகியோர் கலந்துகொண்டனர்.


