நைஜீரியாவில் கடத்தப்பட்ட மேலும் 130 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்
நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் உள்ள ஒரு கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்டதில் எஞ்சிய 130 மாணவர்களும் விடுவிக்கப்பட்டு விட்டதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை நைஜீரிய அரசு “வெற்றி மற்றும் நிம்மதியின் தருணம்” என்று வர்ணித்துள்ளது.
நவம்பர் 21-ஆம் திகதி பாபிரியில் உள்ள செயின்ட் மேரி கத்தோலிக்கப் பள்ளியில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஊழியர்களும் கடத்தப்பட்டனர். அவர்களில் இந்த மாத தொடக்கத்தில் சுமார் 100 குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர்.
“மீதமுள்ள 130 குழந்தைகளும் ஊழியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்” என்பதை அதிகாரிகள் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் “ஒரு மாணவர் கூட கடத்தல்காரர்களின் பிடியில் இப்போது பிடியில் இல்லை” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட மாணவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 230 ஆக இருக்கிறது என்று நைஜீரிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கடத்தல் சம்பவம் நடந்ததிலிருந்து, கடத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்களில் எத்தனை பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சமீபத்திய விடுவிப்பை அரசாங்கம் எவ்வாறு சாத்தியமாக்கியது அல்லது ஏதேனும் பணம் கைமாறியதா என்பது குறித்து முறையாக வெளியிடப்படவில்லை.



