சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் அவுஸ்திரேலியாவில் எதிர்கொள்ளும் புதிய சிக்கல்  

416 Views

சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசி


அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்களின் பெற்றோர்கள் தங்களது சொந்த நாட்டில் சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருந்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் சாதாரணமாக நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஹரூன் இக்பாலின் தந்தை பாகிஸ்தானில் வசித்து வரும் நிலையில், அந்நாட்டில் கிடைக்கக்கூடிய சினோபார்ம் தடுப்பூசியை செலுத்தி கொண்டிருக்கிறார். ஆனால், அவுஸ்திரேலியாவில் நடைமுறைகள் படி அவர் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை செலுத்தியிருப்பதால் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விலக்கு கிடையாது.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி 74 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவுஸ்திரேலியாவின் Therapeutic Goods Administration (TGA) கீழ் இந்த தடுப்பூசிக்கு மட்டுமே செலுத்திக் கொள்வதற்கான வயது (18 வயது முதல் 60 வயது வரை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் இக்பால் தந்தையைப் போன்று 60 வயதுக்கு மேற்பட்ட குடியேறிகளின் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. ஒருவேளை, இக்பால்தந்தை அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல எண்ணினால் 3,000 டொலர்கள் செலவில் அவர் தங்கும் விடுதியில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

“எனது தந்தைக்கு வயது 75, எனது தாய்க்கு 57. ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை வரச் சொல்ல என்னால் இயலாது. அவர்கள் இரண்டு பேரும் இணைந்து  அவுஸ்திரேலியாவுக்கு வர வேண்டும்,” என்கிறார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இக்பால்.

இக்பாலின் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபின் கிழக்கு மாகாணத்தில் உள்ள Faisalabad நகரத்தில் வசித்து வருகிறது. பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அந்நாடு பெருமளவில் சீனாவின் கொரோனா தடுப்பூசியை சார்ந்தே உள்ளது. மிக சிறிய அளவில் மட்டுமே அங்கு Pfizer, AstraZeneca தடுப்பூசிகள் கிடைக்கின்றன.

இக்பாலை போன்று எமிலியோ பார்பைரியும் அர்ஜெண்டினாவில் உள்ள தனது தாய் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பதில் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

“அர்ஜெண்டீனாவில் நீங்கள் தடுப்பூசி தேர்தெடுத்து கொள்வதற்கான வாய்ப்பு கிடையாது. அவர்கள் என்ன செலுத்துகிறார்களோ அதை தான் செலுத்திக்கொள்ள வேண்டும்,” என எமிலியோ குறிப்பிட்டிருக்கிறார்.

சீனா மற்றும் ரஷ்யாவின் தடுப்பூசிகளான சினோபார்ம்  ஸ்புட்னிக் தடுப்பூசியையும் இதுவரை அவுஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப் படவில்லை.

Tamil News

Leave a Reply