
குடிவரவுச் சட்டத்திலுள்ள Character test-நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், நாட்டிலுள்ள அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரித்து பலரை நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசு ஏதுவான சட்டத்திருத்தம் ஒன்றை அரசு வெகுவிரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், அவுஸ்திரேலிய நாடாளுமன்ற வரலாற்றில் மிகவும் பாரதூரமான சட்டமாக கருதப்படும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
இச்சட்டத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் நியூசிலாந்து நாட்டவர்கள் உட்பட புலம்பெயர் பின்னணி கொண்ட பலர் பாதிக்கப்படுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.