மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

392 Views

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளர்

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளர் பதவியில் நிர்வாக சேவை01 அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு வருகைதந்த புதிய ஆணையாளரை மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் உத்தியோகத்தர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து ஆணையாளர் கையெழுத்திட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகரசபை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கடமையினை பொறுப்பேன்றார்.

இதன்போது மாநகர முதல்வர் மற்றும் உத்தியோகத்தர்களினால் புதிய ஆணையாளருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இலங்கை நிருவாக சேவை (தரம் -1 ) உத்தியோகத்தரான இவர் உலக வங்கி திட்டத்திலும் , பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின்  பிரதி ஆணையாளராகவும்  பணியாற்றியுள்ளார்.

இதுவரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply