சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி?

466 Views

சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி
எதிர்வரும் நாள்களில் கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றமொன்று ஏற்படவுள்ளதாகவும், சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணியில் அரசிலுள்ள அமைச்சர்கள் பலர் இணையவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் அவரது தந்தை பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (மற்றும் மொட்டு நாடாளு மன்ற உறுப்பினர்) அனுர பிரியதர்ன யாப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சந்திரிகா அமைக்கவுள்ள புதிய கூட்ட ணியில் அரசிலுள்ள பல அமைச்சர் இணையக்கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil News

Leave a Reply