இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கலைப்பொருட்களை நெதர்லாந்து திருப்பி அனுப்புகிறது

இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நெதர்லாந்தில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆறு தொல்பொருட்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முடிவடைந்த ஒரு கூட்டு சர்வதேச ஆதார ஆராய்ச்சியில், நெதர்லாந்தில் உள்ள Rijksmuseum சேகரிப்பில் இருந்து ஆறு இலங்கைப் பொருட்கள் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டது.

“ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வாள் ,ஒரு தங்க கத்தி, இரண்டு துப்பாக்கிகள், மற்றும் பீரங்கிகள் எல்லாமே கண்டிய இராச்சியத்திற்கு சொந்தமானவை” என அமைச்சு தெரிவித்துள்ளது.

1765 ஆம் ஆண்டு கண்டி அரண்மனை முற்றுகையின் போது டச்சு கிழக்கிந்தியக் கம்பனியால் பெறப்பட்ட தொல்பொருட்கள் டச்சு சொத்து என உறுதிப்படுத்தப்பட்டதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.