நேபாள வெள்ளப் பாதிப்பு : இலங்கையர்களுக்கான அவசர உதவிக்கு புதிய தொடர்பு இலக்கங்கள் வெளியீடு!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு மிக்க திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மேற்கொண்டுள்ளது.

நேபாளத்தில் அவசர உதவி தேவைப்படும் இலங்கையர்கள் காத்மண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு விபரங்கள்:

காத்மண்டு இலங்கைத் தூதரகம்

24 மணிநேர அவசர தொலைபேசி எண்: +977 985 104 8653

மின்னஞ்சல்: [email protected]

இலங்கை வெளிவிவகார அமைச்சு (பொது இராஜதந்திர பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகப் பேச்சாளர் துஷார ரோட்ரிகோ):

இலங்கை செய்திகள்

 

கைப்பேசி / வட்ஸ்அப்: 070 788 7778

மின்னஞ்சல்: [email protected]

தொலைநகல் : 011 2 473 899

நேபாளத்தில் தொடரும் வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பின்பற்றுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.