இந்துக்களின் மயானத்தில் பௌத்த மயானம் பெயர் பதாகை

374 Views

இந்துக்களின் மயானத்தில் பௌத்த மயானம்

இந்துக்களின் மயானத்தில் பௌத்த மயானம்: திருகோணமலை பொது மையானத்தில் திடீர் என்று ‘பௌத்த மயானம்’ என பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சபை அமர்வில் பெரும்பான்மை இன உறுப்பினர்களை தவிர ஏனையோர் இதனை ஏற்க மறுத்த போதிலும் அதையும் மீறி இப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அனுமதியற்ற சட்டபூர்வமற்ற நடவடிக்கையானது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி மன்றத்தின் சட்டத்தை மீறும் இவ்வாறான செயல்கள் சட்டத்தை மதிப்பற்ற தன்மைக்கு ஆளாக்கியுள்ளது.

இது தொடர்பில் இந்துக்களின் மயானம் என்பதை அறிந்தும் இவ்வாறு செயற்படுவது ஒரு வகையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி பௌத்த மயானம் எனும் பெயர் பலகையை அகற்றுமாறும் மக்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது

Leave a Reply