இலங்கை-நாமல் ராஜபக்சவை பிரதமராக்க முயற்சி

248 Views

காலிமுகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக வைத்து நாமல் ராஜபக்சவை பிரதமராக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன என  தகவல் வெளியாகியுள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட சிலர் நாமல் ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என தெரிவித்ததை பயன்படுத்துமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என தகவலகள்  தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடலில் உள்ள சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணுமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடகப்பிரிவிற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil News

Leave a Reply