முள்ளிவாய்க்கால் படுகொலை: சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடு!

00 1 முள்ளிவாய்க்கால் படுகொலை: சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடு!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை  (12) முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றன.

அதே நேரம் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு ஊர்தி பவனி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) காலை நல்லூரில் உள்ள  தியாக தீபம் நினைவிடத்தில் இருந்து  ஆரம்பமானது.

இந்த ஊர்தி பவனியானது, வட, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று மே -18ஆம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.