முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

received 1557675444751014 முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று (04) பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற மாவீரர் துயிலும் இல்ல வளாக சிரமதான  பணி துயிலும் இல்ல பணி குழுவினரின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணி அளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த சிரமதான பணியில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களுடைய குழந்தைகளின் உடலங்களை விதைத்த பெற்றோர் உறவுகள் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிரமதான பணிகளை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.