ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் மலையக மக்கள்

279 Views

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதாவது சுமார் 30 சதவீத மக்கள்  தற்போது உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

86 சதவீதமானவர்கள் மலிவான விலைகளில் பொருட்களை பெறுதல் போன்ற சமாளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். 95 சதவீதமானவர்கள் குறை சத்துள்ள உணவை நுகர்கின்றனர். 83 சதவீதமானவர்கள் பகுதி அளவில் உணவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். 66 சதவீதமானவர்கள் தினசரி உணவை கட்டுப்படுத்தியுள்ளனர்.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், ஏனைய நடுத்தர வருமான நாடுகளை விட இலங்கைப் பெண்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 17 சதவீதமானோர் வளர்ச்சி குன்றியதால் மிகவும் குட்டையாகவும், 15 சதவீதமானோர் மிகவும் உடல் மெலிவாகவும் காணப்படுகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி இதை மேலும் மோசமாக்கும் என்று உலக உணவுத் திட்டத்தின் சமகால நிலைமைகளை உள்ளீர்த்துள்ள ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply