இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் 

ROHINGYA REFUGEES இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் 

மியான்மரில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாகவும் வங்கதேச அகதி முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையின் காரணமாகவும் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், படகு மூலம் 184 ரோஹிங்கியா அகதிகள் மேற்கு ஏசெஹ் மாகாணத்தில் தரையிறங்கியுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 90 பெண்கள், குழந்தைகளுடன் பல அகதிகள் படகில் வந்ததாக ஏசெஹ் மீனவ சமூகத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர் மிப்டா கட் அடே கூறியிருக்கிறார்.

கரை நெருங்குவதற்கு முன் கடலில் இறங்க சொல்லி, கரை சேர நீந்தி செல்லுமாறு படகோட்டி சொன்னதாக ரோஹிங்கியா அகதிகளில் ஒருவர் சொல்லியுள்ளார். இவர்கள் மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்தோனேசியாவின் கணக்குப்படி, கடந்த ஆண்டு நவம்பர் முதல் 918 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதுவே கடந்த 2021ம் ஆண்டில் 180 ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருந்தனர்.