அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை

 

பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கைஅரசுக்கு எதிராக நாடு தழுவியதாக தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக முடியுமான அளவிற்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு கலைந்து செல்லும் போராட்டங்களைப் பாராட்டுவதாகவும், அவ்வாறு இல்லாமல் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிப் போராட்டம் என்ற பெயரில் தொடங்கியுள்ள போராட்டத்தில் தற்போது இரண்டு குழுக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.