இலங்கை: பிரதமர் மகிந்தவை தவிர ஏனைய அமைச்சர்கள் பதவி விலகல்

420 Views

அமைச்சர்கள் பதவி விலகல்

அமைச்சர்கள் பதவி விலகல்

இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

Leave a Reply