இந்திய, சீன உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சி செய்கிறது – வெளிவிவகார அமைச்சா்

Ali sabry.v1 இந்திய, சீன உறவுகளை சமநிலைப்படுத்த இலங்கை முயற்சி செய்கிறது - வெளிவிவகார அமைச்சா்இலங்கையில் அ க்டோபர் நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இரண்டு எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான மும்முனைப் போட்டியாக பரிணமித்து வருவதாக கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி , இலங்கை சில வாரங்களில் அதன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து சர்வதேச பிணை முறியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என்றும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் .

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச பிணை முறியாளர்களுடன் பேசுவது மோசமான நிதி நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு ஒரு முக்கியமான படிமுறையாகும். அதேவேளை ஆசியாவில் பலம்பொருந்திய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயற் சிப்பது இந்த இருநாடுகளும் முக்கிய கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களாக இருப்பதாலாகும் என்றும் கூறியிருக்கின்றாா்.

சிங்கப்பூரில் ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் மாநாட்டின் போதான ஒரு நேர்காணலிலேயே அமைச்சர் அலி சப் ரி இதனை கூறியுள்ளார்.

கடன் வழங்குபவர்களுடனான பத்திர மறுசீரமைப்பு முயற்சிகள் எப்போது முடிவடையும் என்று கேட்கப்பட்டபோது, “இரண்டு வாரங்களுக்குள்என நம்புகிறோம்” என்று அமைச்சா் அலி சப்ரி பதிலளித்தாா். “இந்த மாத இறுதிக்குள், உத்தியோகபூர்வமாக, நாங்கள் மறுசீரமைப்பு செயல்முறையை முடித்துவிடுவோம் பின்னர் நிச்சயமாக, அதற்குஏற்ப, நாங்கள் பணம் செலுத்தத் தொடங்க வேண்டும்” என்றும் அமைச்சா் அலி சப்ரி தெரிவித்தாா்.

“தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களுடனான நெருக்கமான உறவுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவுக்கு உதவும். இரு நாடுகளுக்கும் இடையே நிறைய ஒருங்கிணைவை தூண்டும் இலங்கையின் துறைமுகங்களில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிறுத்தப்படுவதை சமீபத்திய ஆண்டுகளில் புதுடில்லி ஆட்சேபித்துள்ளது” என்றும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சா், “இந்தியாவின் எல்லைக்கு அருகாமையில் உள்ள இத்தகைய பணிகளின் திறன்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து கவலை இருப்பதாகக் கூறி, இந்த ஆண்டு வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகையை கொழும்பு இடைநிறுத்தியது” என்று தெரிவித்தாா்.