மட்டக்குளி காக்கை தீவு கொலையுடன் இராணுவத்தினர் தொடர்பா? விசாரணைகள் ஆரம்பம்

337 Views

விசாரணைகள் ஆரம்பம்

மட்டக்குளி- காக்கைதீவு பிரதேசத்தில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்ட நபரின் கொலையுடன் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பில் காவல்துறையினரால் முன்னெடுத்துள்ள விசாரணைகள் ஆரம்பம் ஆகியுள்ளன.

விசாரணைகளுக்கு இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்தின தெரிவித்துள்ளார்.

மட்டக்குளி பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரான பெண்ணொருவரின் கணவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப் பட்டிருந்தார்.

மட்டக்குளிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் உள்ள சிப்பாய் ஒருவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பினை பேணியுள்ளமை மற்றும் குறித்த சிப்பாய் மேலும் ஐவரது ஒத்துழைப்புடன் இந்தக் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிப்பதாக மட்டக்குளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இந்த கொலையுடன் வேறு இராணுவ சிப்பாய்கள் தொடர்பு பட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதோடு, அவ்வாறு எவரேனும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்டுள்ளமை இனங் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

நன்றி- வீரகேசரி

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply