இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்தார் மிலிந்த மொராகொட

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிற்கு எடுத்துரைத்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவியை பெறுவதற்கான முயற்சிகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது என்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

2021 நவம்பர் முதல் இந்திய நிதியமைச்சரை தொடர்ச்சியாக சந்தித்து வரும் மிலிந்த மொராகொட அந்த சந்திப்பின் ஒருபகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியா இலங்கைக்கு வழங்கிய  அவசர உதவிக்காக மீண்டும் நன்றியை தெரிவித்துள்ள  இலங்கை தூதுவர் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கான இந்தியா தக்க தருணத்திலான நிதி உத்தரவாதத்திற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.