இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த நேற்று பொறுப்பேற்பு

118 Views

இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்தஇந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த: இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நேற்று புதுடில்லியில் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னரே அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொட, நேற்று பதவியேற்றுக் கொண்டதாகவும், இது குறித்த நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது எனவும் இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை உயர் ஸ்தானிகராலய பணியாளர்கள் பாரம்பரிய வழக்கப்படி மிலிந்தவையும், அவரது மனைவி ஜெனிபர் மொரகொடவையும் உயர் ஸ்தானிகராலயத்தில் வெற்றிலை கொடுத்து வரவேற்றனர். இதனை முன்னிட்டு விஷஷ் பிரித் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய மொரகொட, இலங்கையின் நலன்களை முன்னெடுப்பதற்காக அனைவரும் ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இலங்கை – இந்திய உறவுகளை மேன்மையான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021

Leave a Reply