தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் பொது நிலைப்பாடுகளை ஆராயும் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட்டோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
“கடந்த 02ம் திகதி நவம்பர் 2021 திண்ணையில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவே எமது அரசியல் இலக்கு. அதில் ஒருபோதும் விட்டுக் கொடுப்புக்கு இடம் இல்லை.
ஆனால் ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ள 13A முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த அதன் காரணகர்த்தாவான இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வேண்டும்” என்ற கருத்தோடு இக்கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ் பேசும் மக்களை
பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் கூடி, பொது நிலைப்பாடுகளை ஆராயும் கூட்டம் சற்றுமுன் கொழும்பில் ஆரம்பித்தது. #மனோகணேசன் pic.twitter.com/YQdmTGBON8— Mano Ganesan (@ManoGanesan) December 12, 2021
குறித்த சந்திப்பை ரெலோ கட்சி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.