தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் சந்திப்பு

Lanka NewsWeek - மலையக தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திக்க TNA தீர்மானம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் எல்லோரையும் அரவணைத்து போகின்ற நிலமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பின் பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் நாங்கள் எப்படி செயற்பட வேண்டும், தொடர்ந்து அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முடிவை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கூட்டத்தில், நிலம் சம்மந்தமாகவும் மகாண சபைகள் சம்மந்தமாகவும் எங்களுடைய இனம் சார்ந்த வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பலத்தை உருவாக்குதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கின்ற போது, புலம்பெயர்ந்த உறவுகளையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் இணைத்து செயற்படும் போது,பெரிய பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் இப்பொழுது இருக்கின்ற அரசாங்கத்தை நாங்கள் பல விடயங்களில் தடுத்து நிறுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply